டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாதனூர் அருகே விவசாயி கொலை: கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை

மாதனூர் அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:21 am

எம். அருண்குமார்

மாதனூர் அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், மாதனூர் அருகே பாலூர் ஊராட்சி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் விவசாயி தணிகாசலம் (வயது 59). பி.டெக் படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு மாதனூரில் இருந்து புதூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். புதன்கிழமை காலை அவ்வழியாக சென்றவர்கள் தணிகசாலம் இறந்து கிடப்பதை பார்த்துவிட்டு ஆம்பூர் தாலுகா போலீஸôருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் மற்றும் ஆம்பூர் தாலுகா போலீஸôர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.   தணிகாசலத்தை கொலை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும்.  அதுவரை சடலத்தை எடுக்க விடமாட்டோம் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நடவடிக்கை எடுப்பதாக போலீஸôர் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.